கைப்பையே பல லட்சம் : கரீனாவின் ஆடம்பரம்

தினமலர்  தினமலர்
கைப்பையே பல லட்சம் : கரீனாவின் ஆடம்பரம்

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரான சைப் அலிகான் - கரீனா கபூர், சமீபத்தில் மகன் தைமூர் அலிகான் உடன் லண்டன் சென்று திரும்பி உள்ளனர். மும்பை விமான நிலையம் வந்திருந்த அனைவரின் பார்வையும் இவர்கள் மீதே இருந்தது. சைப்பும், தைமூரும் கெத்தாக வர பின்னால் கரீனா கறுப்பு நிற பைஜாம், கூலிங்கிளாஸ் என ஸ்டைலாக வந்தார். குறிப்பாக இவர் கொண்டு வந்த கைப் பையை பலரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

பார்ப்பதற்கு சாதரணமாக தெரிந்தாலும் அந்த பையின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.13 லட்சம். உலகம் முழுக்க பிரபலமான ஹர்ம்ஸ் பெர்கின் ரக கைப்பையை அவர் வாங்கி வந்துள்ளார். இந்த பை மட்டுமல்ல, இது போன்று வேறு சில மாடல்களில் 5 கைப்பைகள் கரீனாவிடம் உள்ளன. ஒவ்வொன்றும் ரூ.8 முதல் 14 லட்சம் மதிப்பு உடையவை. மொத்தமாக இவரிடம் உள்ள கைப்பைகளின் மதிப்பு மட்டும் ரூ.80 லட்சம் என கூறப்படுகிறது.

ஹாலிவுட் தொடங்கி பாலிவுட் வரை நடிகைகள் பெரும்பாலும் ஹர்ம்ஸ் பெர்கின் ரக கைப்பையை தான் உபயோகப்படுத்துவார்கள். உலகளவில் அதிக விலை உள்ள இந்த ரக பையை வைத்திருந்தாலே அவர்கள் பெரும் செல்வந்தவர்கள் என புரிந்து கொள்ளலாம். அந்தளவு இது பணக்காரர்களின் டிரேட் மார்க்காக பார்க்கப்படுகிறது.

மூலக்கதை