ரூ.150 கோடி வசூல் - இதுவே தர்பார் நிலவரம்: லைகா அறிவிப்பு

தினமலர்  தினமலர்
ரூ.150 கோடி வசூல்  இதுவே தர்பார் நிலவரம்: லைகா அறிவிப்பு

லைகா தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் 9ம் தேதி வெளிவந்த படம் 'தர்பார்'. இப்படம் விடுமுறை நாளிலோ, விசேஷ நாளிலோ வெளியாகாமல் ஒரு சாதாரண வேலை நாளில் வெளியானதால் படத்தின் வசூல் சுமார் ரகமே என்றாலும், அடுத்தடுத்து விடுமுறை நாட்களில் வசூல் சிறப்பாகவே அமைந்தது.

படம் வெளியான மறுநாளே படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியதாக சிலர் தகவல் பரப்பினர். ஆனால் அது உண்மையில்லை. ஐந்து நாட்களில் உலகளவில் மொத்தமாகவே ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இனி வரும் நாட்களும் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அடுத்த வாரத்திற்குள் இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அதேசமயம் தனுஷின் பட்டாஸ் நாளை(ஜன., 15) வெளியாவதால் இதன் வசூல் சற்று பாதிக்கப்படலாம்.

மூலக்கதை