பொங்கல் சென்டிமென்ட்டாக ஜன-16ல் வெளியாகும் பிக் பிரதர்

தினமலர்  தினமலர்
பொங்கல் சென்டிமென்ட்டாக ஜன16ல் வெளியாகும் பிக் பிரதர்

மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனரான சித்திக் டைரக்சனில் மூன்றாவது முறையாக மோகன்லால் நடித்துள்ள படம் பிக் பிரதர்.. இந்தப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் இந்தப்படம் வரும் ஜனவரி-16ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பொதுவாக சித்திக் இயக்கம் படங்கள் எல்லாம் ஏப்ரல் மாதம் தான் வெளியாகும்படி பார்த்துக்கொள்வார்.. அதேசமயம் தமிழில் அவர் இயக்கிய பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையில் தான் ரிலீஸாகி வெற்றி பெற்றன.

அந்த சென்டிமென்ட்படி தற்போது மலையாளத்திலும் பொங்கல் பண்டிகை ரிலீசாகவே பிக் பிரதர் படத்தை வெளியிடுகிறார் சித்திக். ஹனிரோஸ், அதிதி மேனன், அர்பாஸ் கான், அனூப் மேனன் ஆகியோர் நடித்துள்ள, அண்ணன் தம்பி பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக உருவாகியுள்ள இந்தப்படம் மோகன்லாலுக்கும் ஒரு பாட்ஷா படம் போல அமையும் என இதன் ட்ரெய்லர் உணர்த்துகிறது..

மூலக்கதை