முதன்முறையாக ஐபிஎஸ் அதிகாரியாக மம்தா மோகன்தாஸ்

தினமலர்  தினமலர்
முதன்முறையாக ஐபிஎஸ் அதிகாரியாக மம்தா மோகன்தாஸ்

மலையாளத்தில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் பாரன்சிக்.. மலையாள சினிமாவில் முழுக்க முழுக்க பாரன்சிக் விஷயங்களை மையப்படுத்திய முழுநீள படமாக க்ரைம் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தை அகில் பால் மற்றும் அனஸ் கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இணைந்து இயக்குகின்றனர்.

இந்தப் படத்தில் கதாநாயகிகளாக மம்தா மோகன்தாஸ் மற்றும் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்த ரெபா மோனிகா ஜான். ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரித்திகா சேவியர் என்கிற ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் மம்தா மோகன்தாஸ்.. 15 வருடங்களுக்கு முன் சினிமாவுக்குள் நுழைந்த மம்தா மோகன்தாஸ் முதன்முதலாக இந்தப்படத்தில் தான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை