ஆடுஜீவிதம் படப்பிடிப்பு தளத்தை பார்க்க விரும்பும் ஏ.ஆர்.ரஹ்மான்

தினமலர்  தினமலர்
ஆடுஜீவிதம் படப்பிடிப்பு தளத்தை பார்க்க விரும்பும் ஏ.ஆர்.ரஹ்மான்

மலையாள இயக்குனர் பிளஸ்சி டைரக்சனில் 'ஆடுஜீவிதம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் பிரித்விராஜ். பல கனவுகளோடு சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கே அடிமையாய் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வஞ்சிக்கப்பட்ட ஒரு பட்டதாரி இளைஞனைப் பற்றிய கதை தான் இந்தப்படம்.. இதற்காக பதினெட்டு மாதங்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் பிரித்விராஜ். அதனால் தான் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை கூட அவர் நழுவவிட வேண்டி வந்தது.

1992ல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'யோதா' படத்திற்கு பின்னர் சுமார் 25 வருடங்கள் கழித்து 'ஆடுஜீவிதம்' என்கிற மலையாள படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே சின்மயி, விஜய் யேசுதாஸ் ஆகியோரை வைத்து இந்தப்படத்திற்கான இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

சமீபத்தில் இந்தப்படம் குறித்து பேசிய பிரித்விராஜ், இந்தப்படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ரொம்பவே ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் லொக்கேசன்களையும் படப்பிடிப்பு தளங்களையும் பார்வையிட விரும்புவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளாராம்.

மூலக்கதை