வராக் கடனால் பெங்களூரு வங்கிக்கு நிதி நெருக்கடி...: ரிசர்வு வங்கியின் நடிவடிக்கையால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
வராக் கடனால் பெங்களூரு வங்கிக்கு நிதி நெருக்கடி...: ரிசர்வு வங்கியின் நடிவடிக்கையால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

பெங்களூரு: வராக்கடன் எதிரொலியாக தத்தளித்த கர்நாடக மாநில கூட்டுறவு வங்கி ஒன்றுக்கு ரிசர்வு வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெங்களூரு பூர்ண பிராஜ்நா நகரில் ஸ்ரீ குரு ராகவேந்திரா சக்கர வங்கி செய்யப்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கணக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில் வராக்கடன் அதிகரித்ததால் ஸ்ரீ குரு ராகவேந்திரா சக்கர வங்கி பெரும் நிதி சுமையில் தத்தளித்தது. இதனை அடுத்து வங்கியின் பண பரிவர்த்தனை செயல்பாடுகளுக்கு தடை விதித்து இருக்கும் ரிசர்வு வங்கி, புதியதாக கடன் கொடுக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், ரூ.35 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்கவும் தடை விதித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வங்கிக்கு படை எடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீ குரு ராகவேந்திரா சக்கர கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ள ரிசர்வு வங்கி, வாடிக்கையாளர்கள் கவலையடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் நிதிநிலை சீரடையும் வரை  ஸ்ரீ குரு ராகவேந்திரா சக்கர கூட்டுறவு வங்கியின் மீதான கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று ரிசர்வு வங்கி கூறியுள்ளது.

மூலக்கதை