ராணி எலிசபெத் பச்சைக்கொடி.. வரலாற்றில் முதல்முறையாக பிரிட்டன் அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறும் இளவரசர் ஹாரி- மேகன் தம்பதி

தினகரன்  தினகரன்
ராணி எலிசபெத் பச்சைக்கொடி.. வரலாற்றில் முதல்முறையாக பிரிட்டன் அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறும் இளவரசர் ஹாரி மேகன் தம்பதி

லண்டன் : பிரிட்டன் அரசக் குடும்பத்தில் இருந்து மனைவியுடன் பட்டத்து இளவரசர் ஹாரி பிரிந்து செல்வதற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து பிரிட்டன் ராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமது பேரன் ஹாரி குடும்பத்தின் எதிர்காலம் குறித்து அரசு குடும்பத்தினர் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தியதாக அதில் ராணி தெரிவித்துள்ளார். புதிய வாழ்க்கையை தொடங்க முடிவு செய்திருக்கும் ஹாரிக்கும் மேகனுக்கும் ஆதரவு தெரிவிப்பதாகவும் அதில் ராணி குறிப்பிட்டுள்ளார். அரசுக் குடும்பத்தில் உறுப்பினர்களாக இருந்த போதும் சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற விருப்பத்தை மதிப்பதாகவும் அவர்களை புரிந்துக் கொள்வதாகவும் ராணி எலிசபெத் கூறி இருக்கிறார். காலம் நிச்சயம் அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவதாகவும் ராணி குறிப்பிட்டுள்ளார். இருப்பினரும் வரவிருக்கும் நாட்களில் நன்கு யோசித்து இறுதி முடிவுகளை எடுக்குமாறு ஹாரி குடும்பத்தினரை ராணி எலிசபெத் கேட்டுக் கொண்டுள்ளார். பிரிட்டன் அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேற ஒப்புதல் கிடைத்துவிட்டதை அடுத்து ஹாரியும் மேகனும் கனடாவில் குடியேறும் முயற்சியை தொடங்கி உள்ளனர். பிரிட்டன் அரசக் குடும்பத்தில் இருந்து ஒருவர் பிரிந்துச் செல்வது அந்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.

மூலக்கதை