உருகுவேயில் புதிய அதிபர் பதவியேற்பு: விடைபெற்றார் ஜோஸ் முஜிகா

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
உருகுவேயில் புதிய அதிபர் பதவியேற்பு: விடைபெற்றார் ஜோஸ் முஜிகா

உருகுவேயின் புதிய அதிபராக டபேர் வாஸ்குயிஸ் பதவியேற்றுக்கொண்டுள்ளார். மாண்டிவிடியோவில் நடந்த நிகழ்வில் அதிபர் பதவியிலிருந்து விலகும் ஜோஸ் முஜிகாவிடம் இருந்து அவர் பொறுப்புகளை முறைப்படி பெற்றுக்கொண்டார். கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் 52.8 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் டபேர் வாஸ்குயிஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2005 முதல் 2010 ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் நாட்டின் அதிபராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர். பதவியேற்றுக் கொண்ட பின் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், மக்கள் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 

மூலக்கதை