பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் இந்தியா வருகை

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் இந்தியா வருகை

டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் இந்தியா வர இருக்கிறார். கடந்த 7ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினார். 2 நாடுகளுக்கு இடையேயான வலுப்படுத்தும் விதமாக இரு தலைவர்களும் உரையாடினர். இந்த உரையாடலின் போது, இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பு ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து வரும் பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்ரம்பின் இந்திய பயணத்தின் மைய புள்ளியாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. விமான போக்குவரத்து, மின்னணு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. டொனால்ட் ட்ரம்பின் வருகையை அடுத்து வாஷிங்டனில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் குழு சில நாட்களில் டெல்லிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை