ஆபாச நடனம்; 21 இளம்பெண் சிக்கினர்: கிளப் உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆபாச நடனம்; 21 இளம்பெண் சிக்கினர்: கிளப் உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலை

திருமலை: கிளப்பில் ஆபாச நடனம் ஆடிய 21 இளம்பெண்கள் போலீசாரிடம் சிக்கினர். தப்பி ஓடிய கிளப் உரிமையாளர் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கிளப்பில் பெண்களை வைத்து ஆபாச நடனம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று கிளப்புக்கு விரைந்து சென்றனர்.

அப்போது இளம்பெண்கள் பாடலுக்கு ஏற்றபடி ஆபாசமாக நடனமாடி கொண்டிருந்தனர். இதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

21 இளம்பெண்கள் பிடிபட்டனர். போலீசார் வருவதை பார்த்த சில பெண்கள், தப்பி ஓடினர்.

பிடிபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தகவலறிந்து தொலைக்காட்சி சேனல்களின் வீடியோகிராபர்கள், பத்திரிகை போட்டோகிராபர்கள் வந்து, இளம்பெண்களை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.

இளம்பெண்கள் ஆவேசமடைந்து, வீடியோ எடுக்கக்கூடாது என்று கூச்சலிட்டு கேமராக்களை பறித்தனர். மேலும் செல்போனில் வீடியோ எடுத்த ஒரு வீடியோகிராபரின் செல்போனை தரையில் போட்டு உடைத்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேமராக்களை பறித்து வீடியோகிராபர்களிடம் போலீசார் திருப்பி கொடுத்தனர்.

மேலும் 21 பேரை ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் கேளிக்கை விருந்து ஒன்றிற்காக தங்களை பிரசாத் என்பவர் அழைத்து வந்து நடனமாட வைத்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிளப் உரிமையாளர், அந்த கிளப்பை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்து கேளிக்கை விருந்து நடத்திய பிரசாத் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் ஆபாச நடனம் ஆடிய இளம்பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை