சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு: தமிழக காங்கிரஸில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு: தமிழக காங்கிரஸில் பரபரப்பு

சென்னை: டெல்லியில் சோனியா காந்தியை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி இன்று காலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது அவர் அழகிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது.

இதில் இந்த கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்று போட்டியிட்டது.

இந்த நிலையில் உள்ளாாட்சி தேர்தலில் கூட்டணி தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே. ஆர். ராமசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிக்கை டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் விவாதிக்காமல் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், காங்கிரஸ் மேலிடம் கே. எஸ். அழகிரி மீது கடும் அதிருப்தி அடைந்தது. இதையடுத்து உடனடியாக அவரை டெல்லிக்கு புறப்பட்டு வருமாறு அழைப்பு விடுத்தது.

அழைப்பை ஏற்று கே. எஸ். அழகிரி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அவர் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை சந்தித்து பேசினார்.

இதையடுத்து அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க இன்று ேநரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் சோனியாகாந்தியை டெல்லியில் அவரது இல்லத்தில் கே. எஸ். அழகிரி சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழக அரசியல் நிலவரம், தமிழக  காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்று சோனியா கேட்டறிந்தார். அப்போது கூட்டணி தொடர்பாக அறிக்கைக்கு விளக்கம் அளிக்கும்படி சோனியா கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் குறித்தும் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தல் இல்லாமல் கூட்டணி தொடப்பாக அறிக்கை எதையும் வெளியிட கூடாது என்றும் அப்போது சோனியா, கே. எஸ். அழகிரிக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

சோனியா காந்தி திடீரென தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரியை அைழத்து பேசியது தமிழக காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை