சிபிஐ அறிக்கையில் எந்த புதிய விசயமும் இல்லை என்பதால்.. ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு குறித்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தினகரன்  தினகரன்
சிபிஐ அறிக்கையில் எந்த புதிய விசயமும் இல்லை என்பதால்.. ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு குறித்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

டெல்லி :  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு குறித்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையில் எந்த புதிய விஷயமும் இல்லை என்பதால், புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையில்... *ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.    அப்போது,  ராஜீவ்காந்தி கொலையில் பெல்ட் குண்டுதான் பயன்படுத்தப்பட்டதா? அது எங்கு தயாரிக்கப்பட்டது என்று சிபிஐ தெரிவிக்கவில்லை என பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது. பெல்ட் குண்டு எங்கு தயாரிக்கப்பட்டது என்பதே தெரியாமல் தமக்கு தண்டனை வழங்கியது தவறு என்றும் மனுதாரர் தரப்பு வாதிட்டது.*இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில் பழைய விவரங்களே மீண்டும் கூறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. *மேலும் பெல்ட் வெடிகுண்டு குறித்து சிபிஐ சிறப்புக் குழு அளித்த அறிக்கையில் திருப்தியில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். *இதையடுத்து, பெல்ட் வெடிகுண்டு கதொடர்பாக பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவுக்கு புதிய விவரங்களுடன் புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது.  *முன்னர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் திருப்தி இல்லை. எந்த புதிய விசயமும் இல்லை என்பதால் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிடடு, வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். வழக்கின் பின்னணி *கடந்த 1991 ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்தில் தொடர்பு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிடோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது உச்ச நீதிமன்ற உத்தரவால் ஆயுள் தண்டனையாக மாறியது.*பேட்டரி வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டில் தான் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக பேரறிவாளன் இருக்கிறார். அவர் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில். \'பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி தான் வாங்கி கொடுத்தது என்ற குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். *இந்நிலையில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சி.பி.ஐ. சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை மனுதாரர் பேரறிவாளன் தரப்பிற்கு கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கு முந்தைய விசாரணையில், பெல்ட் வெடிகுண்டு தொடர்பான தற்போதைய நிலை குறித்த அறிக்கையை 4 வாரங்களுக்குள் சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

மூலக்கதை