ஹாசன்-சிக்ஜரூர் இடையேயான 160 கி.மீ தூர அகல ரயில்பாதையை அஜய்குமார் சிங் ஆய்வு செய்தார்

தினகரன்  தினகரன்
ஹாசன்சிக்ஜரூர் இடையேயான 160 கி.மீ தூர அகல ரயில்பாதையை அஜய்குமார் சிங் ஆய்வு செய்தார்

பெங்களூரு: மைசூரு மண்டலத்திற்கு உட்பட்ட ஹாசன்-சிக்ஜரூரு இடையே உள்ள அகல ரயில் பாதையை தென்மேற்கு ரயில்வே பொது மேலாளர் அஜய்குமார் சிங் ஆய்வு செய்தார். மைசூரு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ஹாசன்-சிக்ஜரூரு இடையே 160 கிமீ தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடப்பு ஆண்டுக்கான ஆய்வு பணிகளை தென்மேற்கு ரயில்வே ெபாது மேலாளர் அஜய்குமார் சிங், மைசூரு ரயில்வே மண்டல மேலாளர் அபர்னாகர்க் உள்பட பல்வேறு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து தென்மேற்கு ரயில்வே பெண் ஊழியர் நலச்சங்க தலைவர் ராம வாடிகா சிக்ஜரூரு ரயில் நிலையம் எதிரே சிறுவர்களுக்கான பூங்காவை திறந்துவைத்தார். இதை தொடர்ந்து ரயில் நிலையங்களில் பசுமை திட்டத்திற்கு பயன்படுத்தும் நர்சரியை திறந்துவைத்தார்.பின்னர், லெவல் கிராசிங் எண் 85ல் வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கும்படி தென்மேற்கு ரயில்வே பொதுமேலாளர் அஜய்குமார் சிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தேவனூரு ரயில் நிலையத்தில் அஜய்குமார் சிங் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.இதேபோல், அந்த மார்க்கத்தில் வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் ஆய்வு செய்தார் அஜய்குமார் சிங். அரசிகெரே எம்.எல்.ஏ. சிவராமகவுடாவின் கோரிக்கையை ஏற்று அரசிகெரே பகுதியில் உள்ள லெவல் கிராசிங்குகளை அகற்றி விட்டு வாகனங்கள் தடையின்றி செல்ல மேம்பாலம் கட்டப்படும் என அஜய்குமார் சிங் உறுதி அளித்தார். மேலும், ஹாசன் நாடாளுமன்ற எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் கோரிக்கையை ஏற்று ஹொளேநரசிபுராவில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக மேலும் ஒரு மேம்பாலம் கட்டப்படும் என அஜய்குமார் சிங் உறுதி அளித்தார்.

மூலக்கதை