டுமினி ஓய்வு | ஜனவரி 13, 2020

தினமலர்  தினமலர்
டுமினி ஓய்வு | ஜனவரி 13, 2020

ஜோகனஸ்பர்க்: கிரிக்கெட் அரங்கில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார் டுமினி. 

தென் ஆப்ரிக்க அணியின் சுழற்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ டுமினி 35. கடந்த 2004ல் ஒருநாள் அரங்கில் அறிமுகம் ஆனார். 46 டெஸ்ட், 199 ஒருநாள், 81 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றார். 2017ல் டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற்றார். கடந்த 2019 உலக கோப்பை தொடருடன் ஒருநாள் அரங்கில் இருந்தும் கிளம்பினார். 

ஐ.பி.எல்., தொடரில் டில்லி, மும்பை, ஐதராபாத் அணிகளுக்காக விளையாடினார். தற்போது அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் முழுமையாக ஓய்வு பெற்றார். வரும் 17ம் தேதி தென் ஆப்ரிக்காவில் துவங்கவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடரில் டுமினி, வர்ணனையாளராக களமிறங்க உள்ளார்.

மூலக்கதை