பயிற்சியில் பாண்ட்யா | ஜனவரி 13, 2020

தினமலர்  தினமலர்
பயிற்சியில் பாண்ட்யா | ஜனவரி 13, 2020

மும்பை: இந்திய அணி வீரர்களுடன் இணைந்து ஹர்திக் பாண்ட்யா பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா 26. முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆப்பரேஷன் செய்து மீண்டார். நியூசிலாந்து தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சேர்க்கப்படவில்லை. 

இருப்பினும் நேற்று மும்பையில் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். கோஹ்லி, பும்ராவுடன் சேர்ந்து, பீல்டிங் பயிற்சி செய்த இவர், இந்திய வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசினார். பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் இதைக் கண்காணித்தார். 

மூலக்கதை