ஹோபர்ட் ஹரிகேன்சை வீழ்த்தியது ஸ்கார்ச்சர்ஸ்

தினகரன்  தினகரன்
ஹோபர்ட் ஹரிகேன்சை வீழ்த்தியது ஸ்கார்ச்சர்ஸ்

ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 77 ரன் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தியது. பெல்லரீவ் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஹோபர்ட் அணி முதலில் பந்துவீசியது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் சேர்த்தது. தொடக்க வீரர் ஜோஷ் இங்லிஸ் 73 ரன் (46 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் மிட்செல் மார்ஷ் 40 ரன் (29 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். அடுத்து களமிறங்கிய ஹரிகேன்ஸ் 17.1 ஓவரில் 98 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஜுவெல் 28, பெய்லி 36, மிலென்கோ 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். பெர்த் பந்துவீச்சில் ஜை ரிச்சர்ட்சன் 4, பவாத் அகமது, லிவிங்ஸ்டோன் தலா 2, கிறிஸ் ஜார்டன், மிட்செல் மார்ஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பெர்த் அணி 2 புள்ளிகள் பெற்றது. இங்லிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மூலக்கதை