மகளிர் கல்லூரிகளுக்கு இடையே சென்னையில் கிரிக்கெட் போட்டி

தினகரன்  தினகரன்
மகளிர் கல்லூரிகளுக்கு இடையே சென்னையில் கிரிக்கெட் போட்டி

சென்னை: ரோட்டரி கிளப் சார்பில் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.  இதுகுறித்து சென்னையில் நேற்று போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான ஹேமமாலினி   செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவில்  சென்னை சில்க் சிட்டி ரோட்டரி கிளப், டிவிஎஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை முதல் முறையாக நடத்த உள்ளோம். இந்தப்போட்டியில் எம்ஒபி வைஷ்ணவா, எத்திராஜ், மகளிர் கிறித்துவக் கல்லூரி, எஸ் எஸ் எஸ் ஜெயின், பாரதி பெண்கள் கல்லூரி, செல்லம்மாள், எஸ்ஐஈடி, ஏஎம் ஜெயின் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் ஜனவரி 16, 17 தேதிகளில் சென்னை தி நகரில் உள்ள ஆர்கேஎம் திடலில் நடைபெறும். முதல் நாள் தலா 15 ஓவர் அடிப்படையில் 4 நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெறும். கடைசி நாள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் 20 ஓவர் அடிப்படையில் நடக்கும். வெற்றி பெறும் அணிக்கு டிவிஎஸ் டிராபியும், 2ம் இடம் பெறும் அணிக்கு ரோட்டரி கிளப் டிராபியும் வழங்கப்படும். இதுதவிர சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த பேட்ஸ்மேன்,  சிறந்த ஆல்ரவுண்டர், சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த பீல்டர் விருதுகளும் வழங்கப்படும்.

மூலக்கதை