பொருளாதார மந்தநிலையால் வேலைவாய்ப்பு குறைந்தது

தினமலர்  தினமலர்
பொருளாதார மந்தநிலையால் வேலைவாய்ப்பு குறைந்தது

மும்பை:தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலை, நாட்டின் புதிய வேலைவாய்ப்புகளை கடுமையாக பாதித்துள்ளதாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., எக்கோரேப் எனும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:பொருளாதார மந்தநிலை, நாட்டின் வேலைவாய்ப்புகளை மிகவும் பாதித்துள்ளது.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நாட்டில், 15.8 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுவே, கடந்த நிதியாண்டில், 89.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் தரவுகள் அடிப்படையில் இவ்வாறு மதிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக தரவுகள், மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறும் ஊழியர்கள் தகவல் திரட்டாகும்.இந்த தரவுகள், மத்தியமற்றும் மாநில அரசு வேலைகள், தனியார் நிறுவனவேலைகள் ஆகியவற்றை உள்ளட்டக்கியதல்ல. இந்த தரவுகள் அனைத்தும், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும்.தேசிய ஓய்வூதிய திட்டத்தின் அடைப்படையிலும், மத்திய – மாநில அரசுகள், தற்போதைய நிலையில் நடப்பு நிதியாண்டில், 39 ஆயிரத்துக்கும் குறைவான வேலைவாய்ப்புகளையே உருவாக்க முடியும்.இவ்வாறு, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை