குடியரசு தினவிழா அணிவகுப்பில் முதல் முறையாக அப்பாசே, சினூக் ஹெலிகாப்டர்கள் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
குடியரசு தினவிழா அணிவகுப்பில் முதல் முறையாக அப்பாசே, சினூக் ஹெலிகாப்டர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: நாட்டின் 71வது குடியரசு தினவிழா அணிவகுப்பில், விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அப்பாசே, சினூக் ரக ஹெலிகாப்டர்கள் முதல் முறையாக பங்கேற்க உள்ளன. 71வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் வரும் 26ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடக்கும் விழாவில், இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ பங்கேற்க இருக்கிறார்.குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி, ராணுவ அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். இதில் ராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள, தாக்குதலுக்கான அப்பாசே ஏஎச்-64, போக்குவரத்துக்கான சினூக் சிஎச்-47 ரக ஹெலிகாப்டர்கள் முதல் முறையாக பங்கேற்க உள்ளன.இதுகுறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``குடியரசு தினவிழாவில் ஏற்கனவே பங்கேற்கும் துருவ் ரக ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றுடன் இந்த ஆண்டு அப்பாசே ஏஎச்-64, சினூக் சிஎச்-47 ரக ஹெலிகாப்டர்கள் முதல் முறையாக பங்கேற்க உள்ளன. இதன் மூலம் இந்தியா தனது விமானப்படை வலிமையை வெளிப்படுத்தும்’’ என்றார்.

மூலக்கதை