தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்புக்கு தூக்கு தண்டனை ரத்து

தினகரன்  தினகரன்
தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்புக்கு தூக்கு தண்டனை ரத்து

லாகூர்: தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர்  பர்வேஸ் முஷாரஃப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை லாகூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்னாள் சர்வாதிகாரி  பர்வேஸ் முஷாரஃப்பு மீது கடந்த 2013-ம் ஆண்டு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தானில் தவறான முறையில் அவசர நிலை பிரகடனம் செய்ததற்காக அப்போதைய அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப் மீது அந்நாட்டு அரசு தேசத் துரோக வழக்கு பதிவு செய்தது. அத்துடன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கிலும்  பர்வேஸ் முஷாரஃப்பு பெயர் சேர்க்கப்பட்டது. அவர் மீதான வழக்கு பெஷாவரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. நீதிபதி யவார் அலி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரணை செய்தது. விசாரணை முடிந்த நிலையில்,  பர்வேஸ் முஷாரஃப்பிற்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.  மேலும், தண்டனைக்கு முன்  பர்வேஸ் முஷாரஃப்பு இறந்தால், அவரது உடலை மூன்று நாள் தூக்கில் தொங்கவிட வேண்டும் எனவும் தீர்ப்புரையில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் பர்வேஸ் முஷாரஃப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் முடிவில்,  பர்வேஸ் முஷாரஃப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஐகோர்ட் நீதிபதிகள் ரத்து செய்து தீர்ப்பளித்து உள்ளனர். 

மூலக்கதை