அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் அடுக்குமாடி கட்டிடங்களில் கட்டுக்கடங்காமல் கொளுந்து விட்ட எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். பவுண்ட் புரூக் என்ற இடத்தில் கட்டுமான பணி நடந்து வரும் 5 மாடி கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே, அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் வணிக வளாகங்களுக்கும் தீ பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.இதனால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் பலமணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை