ரோகித் சர்மா, ஷமி தேர்வு: இந்திய ‘டுவென்டி–20’ அணி அறிவிப்பு | ஜனவரி 13, 2020

தினமலர்  தினமலர்
ரோகித் சர்மா, ஷமி தேர்வு: இந்திய ‘டுவென்டி–20’ அணி அறிவிப்பு | ஜனவரி 13, 2020

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ரோகித் சர்மா, முகமது ஷமி இடம் பிடித்தனர். கேரள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டார்.

நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, ஐந்து ‘டுவென்டி–20’, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ வரும் 24ல் ஆக்லாந்தில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் ஆக்லாந்து (ஜன. 26), ஹாமில்டன் (ஜன. 29), வெலிங்டன் (ஜன. 31), மவுன்ட் மவுன்கனுய் (பிப். 2) நகரங்களில் நடக்கவுள்ளன.

‘டுவென்டி–20’ தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ரோகித் சர்மா, முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டனர். புனேயில் நடந்த இலங்கைக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ போட்டியில் 6 ரன் மட்டும் எடுத்த கேரள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை. இந்தியா ‘ஏ’ அணியில் இருந்து விலகிய ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணி

விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், மணிஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி.

மூலக்கதை