பொய், அநீதி, முகஸ்துதியின் பகுதியாக இருக்க விரும்பவில்லை தாயகத்தை துறந்தார் ஈரானின் ஒலிம்பிக் வீராங்கனை: ஐரோப்பாவுக்குச் சென்றுவிட்டதாக பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொய், அநீதி, முகஸ்துதியின் பகுதியாக இருக்க விரும்பவில்லை தாயகத்தை துறந்தார் ஈரானின் ஒலிம்பிக் வீராங்கனை: ஐரோப்பாவுக்குச் சென்றுவிட்டதாக பதிவு

துபாய்: கடந்த வாரத்தில், ஈரானிய ராணுவம் ஒரு உக்ரைன் விமானத்தை தவறாக சுட்டுக்  கொன்றபோது, ​​இரட்டை குடியுரிமை பெற்ற பல ஈரானியர்கள் என 176 பேர்  கொல்லப்பட்டனர். மேலும் யு. எஸ் விமானத் தாக்குதலால் கொல்லப்பட்ட ஈரானிய  ராணுவத் தளபதியின் இறுதிச் சடங்கில் 56 பேர் நெரிசலில் இறந்தனர்.

இந்நிலையில், 2016ம் ஆண்டில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த டேக்வாண்டோ சாம்பியன் கிமியா அலிசாதே, தனது தாயகத்தை விட்டு ஐரோப்பாவுக்குச் சென்றுவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‘ஹலோ! குட்பை அல்லது இரங்கலுடன் தொடங்க வேண்டுமா? ஈரானின் ஒடுக்கப்பட்ட  மக்களுக்கு வணக்கம்.

ஈரானின் உன்னதமான மக்களே, எப்போதும் துக்கத்தில் இருக்கும் உங்களுக்கு எனது இரங்கல். யாரும் என்னை ஐரோப்பாவிற்கு அழைக்கவில்லை.

எனக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. எனக்கு ஏற்பட்ட வேதனையையும் கஷ்டத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

காரணம், பாசாங்குத்தனம், பொய்கள், அநீதி மற்றும் முகஸ்துதி ஆகியவற்றின் ஒரு பகுதியாக நான் இருக்க விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, ஈரானின் துணை விளையாட்டு அமைச்சர் மஹின் ஃபர்ஹாடிசாதே கூறுைகயில், “நான் கிமியா அலிசாதேவின் இன்ஸ்டாகிராம் பதிவை படிக்கவில்லை, ஆனால் எனக்குத் தெரிந்தவரை அவர் பிசியோதெரபியில் தனது படிப்பைத் தொடர விரும்பினார் என்றே தெரிகிறது’’ என்றார்.

முன்னதாக கிமியா அலிசாதே எழுதிய பதிவில், ‘ஈரானில் மில்லியன் கணக்கான ஒடுக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருவள். அவர்கள் தங்களின் சுயநலத்திற்காக மார்க்கத்தை பயன்படுத்துகின்றனர்.

அவர்கள் கட்டளையிட்டதை மீண்டும் மீண்டும் செய்தேன். அவர்கள் கட்டளையிட்ட ஒவ்வொரு வாக்கியதையும் பின்பற்றினேன்.

நம்மில் யாரும் அவர்களுக்கு முக்கியமில்லை, நாங்கள் வெறும் கருவிகள். ‘ஒரு பெண் தனது கால்களை நீட்டுவது நல்லொழுக்கம் அல்ல’ போன்ற கருத்துக்களால் அதிகாரிகள் அவமானப்படுத்தினார்கள்.

அதிகாரிகளால் பிரசார கருவியாக பயன்படுத்தப்பட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

.

மூலக்கதை