இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் உலகின் சிறந்த வீராங்கனையாக தேர்வு: எஃப்.ஐ.எச் நிர்வாகக் குழு அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் உலகின் சிறந்த வீராங்கனையாக தேர்வு: எஃப்.ஐ.எச் நிர்வாகக் குழு அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் 2019ம் ஆண்டின் ‘உலகின் சிறந்த தடகள வீராங்கனை’ என்ற பெயரை பெற்றதாக எஃப். ஐ. எச் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. மொத்தமாக 25 விளையாட்டு வீரர்கள் சர்வதேச கூட்டமைப்புகளால் அந்தந்த விளையாட்டுகளிலிருந்து இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இதுகுறித்து இந்திய ஹாக்கி அணியின் தலைவர் முஷ்டாக் அகமது கூறுகையில், “2019ம் ஆண்டின் சிறந்த உலக விளையாட்டு தடகள வீராங்கனையாக ராணி ராம்பால் பரிந்துரைக்கப்பட்டார் என்ற செய்தியால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அவர் விளையாட்டு, நாட்டில் பலருக்கு ஒரு பெரிய உத்வேகம் அளித்துள்ளது.

அவர், விளையாட்டில் தனது சொந்த அடையாளத்தை பதித்துள்ளார். ஜன.

30ம் தேதியுடன் முடிவடையும் ஆன்லைன் வாக்களிப்புக்கு பின், வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். அவருக்கு வாக்களித்த அனைத்து ஹாக்கி ரசிகர்களும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு ராணி மற்றும் இந்திய மகளிர் அணிக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

கடந்த ஆண்டு, அக்ரோபாட்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் ஜோடிகளான மரியா செர்னோவா மற்றும் ஜார்ஜி படரேயா (ரஷ்யா) ஆகியோர் 159,348 வாக்குகளைப் பெற்று, அமெரிக்க பவர்லிஃப்டர் ஜெனிபர் தாம்சனை விட 152,865 வாக்குகளைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை