பிசிசிஐ செயலாளரிடம் விருது பெற்ற பும்ரா பும்ராவுக்கு பாலி உம்ரிகர் விருது: பிசிசிஐ சார்பில் வழங்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிசிசிஐ செயலாளரிடம் விருது பெற்ற பும்ரா பும்ராவுக்கு பாலி உம்ரிகர் விருது: பிசிசிஐ சார்பில் வழங்கல்

மும்பை: பிசிசிஐ சார்பாக ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பிசிசிஐயின் உயரிய விருதான பாலி உம்ரிகர் விருதை இந்தாண்டு வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பெற்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா பெற்றனர். முன்னதாக, பிசிசிஐயின் ஆண்டுக்கூட்டம் மும்பையில் நடந்த போது, இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

சிறந்த வீராங்கனைக்கான விருதை பூனம் ஜாதவ் பெற்றார். சிறந்த அறிமுக வீரருக்கான விருதை மாயங்க் அகர்வால் வென்றார்.

சிறந்த அறிமுக வீராங்கனைக்கான விருதை சபாலி வர்மா வென்றார்.

முன்னதாக சேவக் வரவேற்புரை நிகழ்த்தினார்.

.

மூலக்கதை