போராட்டத்தை தூண்டியதாக இங்கிலாந்து தூதர் கைது: ஈரானுக்கு கடும் கண்டனம்

தினகரன்  தினகரன்
போராட்டத்தை தூண்டியதாக இங்கிலாந்து தூதர் கைது: ஈரானுக்கு கடும் கண்டனம்

லண்டன்: ஈரானுக்கான இங்கிலாந்து தூதர் ரோப் மெக்யர் கைது செய்யப்பட்டது, சர்வதேச சட்டத்தை வெளிப்படையாக மீறிய செயலாகும்’ என்று ஈரானுக்கு இங்கிலாந்து அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் புரட்சிகர ராணுவப்படை தளபதி சுலைமானி படுகொலையால், அமெரிக்கா-ஈரான் இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது.டெஹ்ரானில் போராட்டக்காரர்களை தூண்டி விடுவதாக குற்றச்சாட்டிய ஈரான் அரசு, தனது நாட்டுக்கான இங்கிலாந்து தூதர் ரோப் மெக்யரை கைது செய்தது. பின்னர், ஒரு மணி நேரம் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார்.இது குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப் கூறுகையில், எவ்விதமான அடிப்படை காரணங்களும் இல்லாமல் ஈரானுக்கான இங்கிலாந்து தூதர் ரோப் மெக்யர் கைது செய்யப்பட்டது, சர்வதேச சட்டத்தை மீறிய செயலாகும். இந்த சந்தர்ப்பத்தில், சர்வதேச நாடுகளிடம் இருந்து விலகி நிற்பதா அல்லது பதற்றத்தை தணிக்கும் பாதையா என்பதை ஈரான் முடிவு செய்ய வேண்டும்,’’ என்றார்.* மன்னிப்பு கேளுங்கள்:இங்கிலாந்து தூதர் கைது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் அளித்த பேட்டியில், வியன்னா ஒப்பந்தத்தை மீறுவதில் ஏற்கனவே மோசமான வரலாறு படைத்திருக்கும் ஈரான், தற்போதும் அதனை மீறியுள்ளது. இங்கிலாந்தின் உரிமைகளை மீறியதற்காக ஈரான் மன்னிப்பு கேட்க வேண்டும். அதே நேரம், சர்வதேச நாடுகளின் தூதர்கள், உரிமைகளையும் ஈரான் மதிக்க வேண்டும்,’’ என்றார்.

மூலக்கதை