பல வகையான ஏவுகணைகளுடன் 4ம் தலைமுறை போர்கப்பலை கடற்படையில் சேர்த்தது சீனா

தினகரன்  தினகரன்
பல வகையான ஏவுகணைகளுடன் 4ம் தலைமுறை போர்கப்பலை கடற்படையில் சேர்த்தது சீனா

பீஜிங்: பல வகையான ஏவுகணைகளை ஏவும் திறனுடைய 4ம் தலைமுறை போர்க்கப்பலை சீனா தனது கடற்படையில் நேற்று சேர்த்தது. சீனா தனது கடற்படையை வேகமாக மேம்படுத்தி வருகிறது. தற்போது, ‘நான்சாங்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட 4ம் தலைமுறை போர்க்கப்பலை, கடற்படையில் நேற்று இணைத்தது. இதில் வான் பாதுகாப்பு ஏவுகணை, கப்பலை தாக்கும் ஏவுகணை, நீர்மூழ்கி கப்பலை தாக்கும் ஏவுகணை, தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த போர்க்கப்பல் 180 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும், 10 ஆயிரம் டன் எடையும் கொண்டது. சீனாவின் விமானம் தாங்கி போர்க் கப்பல்களுக்கு பாதுகாப்பாக செல்ல இந்த நான்சாங் கப்பல் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. விமானம் தாங்கி போர்க்கப்பலுடன் செல்லாமல் தனியாக போர்க்கப்பல் குழுவுடன் சென்று பலவிதமான தாக்குதல் நடத்தும் திறனும் இந்த போர்க்கப்பலுக்கு உள்ளது. இதேபோல், மேலும் 5 போர்க்கப்பல்களை கட்டும் பணிகள் சீனாவின் தலியன் கப்பல் கட்டும் தளத்தில் வேகமாக நடந்து வருகிறது. சீன கடற்படையில் தற்போது 2 விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன. எதிர்காலத்தில் 5 முதல் 6 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை கட்டுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. அந்த கடற்படையில் தற்போது 68 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.

மூலக்கதை