ஈரான் நாடாளுமன்றத்தில் ராணுவத்தலைவர் விளக்கம்

தினகரன்  தினகரன்
ஈரான் நாடாளுமன்றத்தில் ராணுவத்தலைவர் விளக்கம்

டெஹ்ரான்: ஈரான் நாடாளுமன்றத்தில் ரகசிய விதிகளுக்கு உட்பட்டு மூடிய அறைக்குள் நேற்று கூட்டம் நடந்தது. இதில் புரட்சிகர பாதுகாப்பு படைத் தலைவர் ஹோசைன் சலாமி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ராணுவத் தளபதி காசிம் சுலைமாணி கடந்த 3ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டது குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. அத்துடன், இதற்கு ஈரான் ராணுவம் கொடுத்த பதிலடி தாக்குதல், இந்த தாக்குதலின் போது உக்ரைன் பயணிகள் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது ஆகியவை குறித்தும் அவர் விளக்கம் அளித்திருக்க கூடும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

மூலக்கதை