சிவில் சர்வீசஸ் தேர்வில் விளையாட்டு சலுகை பெற மகனுக்கு போலி கிரேடு - ஏ சான்று: ஐஏஎஸ் அதிகாரி மீது மாஜி முதன்மை செயலாளர் பகீர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிவில் சர்வீசஸ் தேர்வில் விளையாட்டு சலுகை பெற மகனுக்கு போலி கிரேடு  ஏ சான்று: ஐஏஎஸ் அதிகாரி மீது மாஜி முதன்மை செயலாளர் பகீர்

சண்டிகர்: அரியானா மாநிலத்தின் முன்னாள் முதன்மை செயலாளர் (விளையாட்டு) அசோக் கெம்கா, அரியானாவின் விளையாட்டு இயக்குனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஜகதீப் சிங் மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுெதாடர்பாக, மாநில அரசுக்கு அசோக் கெம்கா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ரியானாவின் விளையாட்டு இயக்குனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஜகதீப் சிங், தான் வேறொரு துறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு, தன்னுடைய மகனும் சர்வதேச அளவிலான துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்ற விஸ்வஜீத் சிங்குக்கு கிரேடு - ஏ விளைாட்டு தரச்சான்று கொடுத்துள்ளார்.

இது, அரியானா சிவில் சர்வீசஸ் (எச்சிஎஸ்) தேர்வில் விளையாட்டு துறை ஒதுக்கீட்டில் எளிதான கேடரில் நுழைவதற்கான முயற்சியாக உள்ளது. தந்தை மற்றும் மகன் செய்துள்ளது தவறான நடத்தை மற்றும் கிரிமினல் குற்றங்கள்.

கிரேடு-ஏ விளையாட்டு தர சான்றிதழ் விஸ்வஜீத்துக்கு ஜூன் 12, 2018 அன்று வழங்கப்பட்டது. இயக்குநராக (விளையாட்டு) ஜகதீப் சிங், அந்த சான்றில் இறுதியாக கையொப்பமிட்டவர்.

அதே நாளில், ஜகதீப் விளையாட்டுத் துறையிலிருந்து இடமாற்றப்பட்டார். ஒரு வருடம் கழித்து, ஜூலை 2019ல், விஸ்வஜீத் அதே கிரேடு-ஏ சான்றிதழைப் பயன்படுத்தி மாநில அரசின் தகுதியான விளையாட்டு வீரர்கள் (ஈஎஸ்பி) ஒதுக்கீட்டின் கீழ் எச். சி. எஸ் முதன்மைத் தேர்வை எழுதினார்.

அவர் டிச. 19, 2019 அன்று எச். சி. எஸ் (நிர்வாகி) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

கிரேடு-ஏ சான்றிதழைப் பெற்றதற்காக, ஜெர்மனியின் சுஹ்லில் 2014 மே 26 முதல் 2014 ஜூன் 1 வரை நடைபெற்ற சர்வதேச படப்பிடிப்பு விளையாட்டு கூட்டமைப்பு (ஐ. எஸ். எஸ். எஃப்) ஜூனியர் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்றதாக விஸ்வஜீத் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஐ. எஸ். எஸ். எஃப் சாம்பியன்ஷிப் என்பது போலியானது என  விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், சாம்பியன்ஷிப்பை ஏற்பாடு செய்த ஜெர்மன் தேசிய துப்பாக்கி சூடு கூட்டமைப்பான டாய்ச் ஷுட்சன்பண்ட் ஈவி (டி. எஸ். பி).

இதில் பங்கேற்ற விஸ்வஜீத், தனிப்பட்ட தரவரிசையில் 16வது இடத்தை பெற்றார். எனவே, தந்தை மற்றும் மகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, அதிகாரி ஜகதீப் சிங் கூறுகையில், ‘எனது மகனுக்கு வழங்கிய சான்றிதழ் உண்மையானது.

ஐ. எஸ். எஸ். எஃப் போட்டிகளை நடத்த தேசிய கூட்டமைப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. ஐ. எஸ். எஸ். எஃப் ஜூனியர் கோப்பை -2014க்கான ஒழுங்கமைக்கும் அதிகாரமாக ஐ. எஸ். எஸ். எஃப் இருந்தது.

சான்றிதழில் எந்தத் தவறும் இல்லை’ என்றார்.

இருந்தும், இவ்விவகாரம் அரியானாவில் அரசு வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.

.

மூலக்கதை