ரஞ்சி போட்டியில் படுகாயம் பிரித்வி ஷா விலகல்: நியூசி. டூர் வாய்ப்பு மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரஞ்சி போட்டியில் படுகாயம் பிரித்வி ஷா விலகல்: நியூசி. டூர் வாய்ப்பு மறுப்பு

மும்பை: நியூசிலாந்து செல்லவுள்ள இந்திய அணி ஐந்து ‘டி20’ (ஜன. 24 - பிப்.

2), மூன்று ஒருநாள் (பிப். 5 - 11), இரண்டு டெஸ்ட் போட்டிகள் (பிப்.

21 - மார்ச் 4) கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் ஆட்டத்தில் மும்பை அணிக்காக களம் இறங்கிய இளம் வீரர் பிரித்வி ஷா பீல்டிங்கின் போது இடது சோல்டரில் படுகாயமடைந்தார்.தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக, நாளை மறுதினம் நியூசிலாந்துக்கு புறப்படும் இந்திய ‘ஏ’ அணியில் பிரித்வி ஷாவும் இடம் பெற்றிருந்தார்.

அங்கு 17, 19ம் தேதிகளில் நடக்கும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இருந்து திடீரென பிரித்வி ஷா விலகியுள்ளார்.

இதனை ஐசிசி உறுதி செய்துள்ளது.

.

மூலக்கதை