மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு தொடர்பான 8-ம் கட்ட விசாரணையில், குவாரி உரிமையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகள் சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு தொடர்பான 8ம் கட்ட விசாரணையில், குவாரி உரிமையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகள் சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு தொடர்பான 8-ம் கட்ட விசாரணையில், குவாரி உரிமையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகள் சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

சகாயம் தலைமையில் 8-ம் கட்ட விசாரணை, மூன்றாம் நாளாக இன்று நடைபெற்று வருகிறது. 15-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. குவாரி உரிமையாளர்களின் பணப் பரிவர்த்தனை, கடன் விவரங்கள் போன்றவை குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டிருந்தது. இன்றைய விசாரணையில், தனியார் வங்கியைச் சேர்ந்த நிர்வாகிகள், நேரில் விளக்கம் அளித்து வருகின்றனர். இதே போல, ஏற்கனவே, முறைகேடு தொடர்பாக, சுங்கத்துறை, கலால்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் அறிக்கை அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதிகாரிகள் நேரிலும், தபால் மூலமும் இன்றும் விளக்கம் அளிக்க உள்ளனர். அதே நேரத்தில், குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் மேலூர் பகுதியில் உள்ள குவாரிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இழப்பீடு குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, ஆளில்லா விமானம் மூலம் குவாரிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மூலக்கதை