சக வீரரை தரம் தாழ்த்தி பேசிய விவகாரம் ஆமாம்... உங்களது நடத்தை சரியில்லை: ஸ்டோயினிசுக்கு 4 லட்சம் அபராதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சக வீரரை தரம் தாழ்த்தி பேசிய விவகாரம் ஆமாம்... உங்களது நடத்தை சரியில்லை: ஸ்டோயினிசுக்கு 4 லட்சம் அபராதம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான மெல்போர்ன் ஸ்டார்ஸின் டி20 பிக் பாஷ் லீக் போட்டியின் போது நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோயினிஸுக்கு (30) 7500 டாலர் (தோராயமாக ரூ. 4 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஷ் லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸின் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றபோது,  மார்கஸ் ஸ்டோயினிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளில் பேசிக் கொண்டனர்.

இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மோதலைத் தொடர்ந்து, ஸ்டோனிஸ் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டார்.

இதனால், இவ்விவகாரம் தொடர்பாக எந்தவொரு முறையான விசாரணையும் நடத்தவில்லை. இருந்தும்,  மார்கஸ் ஸ்டோயினிஸுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது, டி மெரிட் புள்ளிகள் அளிக்கவில்லை. இதுகுறித்து மார்கஸ் ஸ்டோயினிஸ் கூறுகையில், “நான் இப்போதே சிக்கிக் கொண்டேன்; தவறு செய்ததை உடனடியாக உணர்ந்தேன்.

கேனிடமும் நடுவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.

தண்டனையையும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார். இதனிடையே மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் அடுத்த போட்டி ஜன.

8ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை