வீரர்கள் பயற்சியின் போது மோதல் ஷிகர் தவானை குத்திய சாஹல்: வீடியோ வைரலால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீரர்கள் பயற்சியின் போது மோதல் ஷிகர் தவானை குத்திய சாஹல்: வீடியோ வைரலால் ரசிகர்கள் அதிர்ச்சி

கவுகாத்தி: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கவுகாத்தி நகரில் நேற்று நடைபெற இருந்த நிலையில், மழையால் கைவிடப்பட்டது. முன்னதாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தப் பயிற்சி தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ரிஷப் பந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அது, வீரர்கள் குத்துச் சண்டை பயிற்சி மேற்கொள்வது தொடர்பான இரண்டு வீடியோக்கள்.

முதல் வீடியோவில் உடற்பயிற்சியின் போது ஷிகர் தவானும், ரிஷப் பந்தும் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்கின்றனர்.

இன்னொரு வீடியோவில் தவானுடன் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் குத்துச் சண்டை பயிற்சி மேற்கொள்கிறார்.

ஆனால், இந்த வீடியோவில் குறும்புத்தனமாக ஷிகர் தவானை சாஹல் சரமாரியாக குத்துவது போன்று உள்ளது. சிறிது நேரத்தில் ரிஷப் பந்து ஓடிவந்து தவானை பிடித்துகொள்ள, தவான் மீது சரமாரியாக சாஹல் குத்துவிடுகிறார்.

அப்போது சில குத்துகள் ரிஷப் பந்துக்கும் விழுகிறது.

கிரிக்கெட் வீரர்களின் குறும்புத்தனமான இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

.

மூலக்கதை