செர்பிய நடிகையுடன் காதல் நிச்சயதார்த்தமா...? சொல்லவே இல்ல...!: ஹர்திக் பண்டியாவின் தந்தை வியப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
செர்பிய நடிகையுடன் காதல் நிச்சயதார்த்தமா...? சொல்லவே இல்ல...!: ஹர்திக் பண்டியாவின் தந்தை வியப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா  கடந்த சில மாதங்களாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டு, பின் அதில் இருந்து மீண்டு வருகிறார்.

இந்நிலையில் அவரது காதல் விவகாரம் நீண்ட காலமாகவே பேசும் பொருளாகியிருந்தது. நடாஷா ஸ்டான்கோவிக் என்ற செர்பிய நாட்டு நடிகையை  ஹர்திக் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதனை ஹர்திக் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு கொடுக்கும் விதமாக தனது காதலை ஒப்புக்கொண்டு ஹர்திக், காதலியுடன் புகைப்படம் மற்றும் நடுக்கடலில் நடாஷாவுக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் நடந்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.இதனைப்பார்த்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோஹ்லி, ‘கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’ என ட்விட்டில் வாழ்த்தியிருந்தார். இவ்வாறாக பரபரப்பு பற்றிக் கொள்ள, திடீர் திருப்பமாக, ‘பாண்டியாவுக்கு திருமணம் நிச்சயமானது குறித்து எங்களுக்கு தெரியவே தெரியாது’ என்று அவரது தந்தை ஹிமான்ஷு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுைகயில், ‘‘நடாசா ஒரு நல்ல பெண்; அவளை நாங்கள் மும்பையில் பல சந்தர்பங்களில் சந்தித்துள்ளோம்.

அவர்கள் துபாய்க்கு விடுமுறைக்கு செல்கிறார்கள் என்பது மட்டும் தெரியும். நிச்சியதார்த்தம் செய்து கொண்டார்கள் என்பதெல்லாம் தெரியாது.

அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட விசயத்தை ஊடகங்கள் மூலமாகதான் தெரிந்துகொண்டோம்’’ என்றார்.

.

மூலக்கதை