இந்தியாவில் 2022 காமன்வெல்த் போட்டி நட்பு திட்டத்தின் கீழ் ஒப்புதல்: மத்திய விளையாட்டு அமைச்சகம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவில் 2022 காமன்வெல்த் போட்டி நட்பு திட்டத்தின் கீழ் ஒப்புதல்: மத்திய விளையாட்டு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: இங்கிலாந்தின் பர்மிங்காமில் 2022ல் நடக்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்  துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகளை நடத்த அனுமதி  மறுக்கப்பட்டதால், காமன்வெல்த் நிகழ்வை புறக்கணிப்பதாக ஐ. ஓ. ஏ  அச்சுறுத்தியது. இந்தியாவின் முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.   கடந்தமுறை இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தபோது, துப்பாக்கி  சுடுதல் விளையாட்டில் 16 பதக்கங்களை இந்தியா வென்றது.

இந்நிலையில்,  இந்தியாவின் முடிவு குறித்து, காமன்வெல்த் நிர்வாகிகள் இந்திய காமன்வெல்த்  நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால்,  பர்மிங்காமில் நடக்கும் போட்டியின் போது, துப்பாக்கி சுடுதல் மற்றும்  வில்வித்தை போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதற்கிடையே, இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை நிகழ்வுகளை நடத்துவதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரண்டு விளையாட்டுகளும் மார்ச் 2022ல் காமன்வெல்த் விளையாட்டு நட்பு திட்டத்தின் கீழ் நடைபெறும்.

முன்னதாக மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் எஸ். பி. எஸ் டோமர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ. ஓ. ஏ) தலைவர் நரிந்தர் பாத்ராவுக்கு ஒரு கடிதம் எழுதி, அதன்மூலம் இந்த தகவலை உறுதிபடுத்தி உள்ளார்.

.

மூலக்கதை