முஃப்தி முகமதுவின் சர்ச்சை கருத்து பற்றி ராஜ்நாத் சிங் விளக்கம்: காங்கிரஸ் வெளிநடப்பு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை

ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் முஃப்தி முகமது சயீத் தெரிவித்த கருத்து பற்றி பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன

மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த உடன், இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே, முஃப்தி முகமது சயீத்தின் கருத்துக்கு பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் அல்லது கண்டன அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முஃப்தி முகமது சயீத்தின் கருத்து தனிப்பட்டது எனவும் அரசுக்கும் அவரது கருத்தும் தொடர்பில்லை எனவும் கூறினார். மேலும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் சுமூகமாக நடந்ததற்கு ராணுவமும் தேர்தல் ஆணையமுமே காரணம் எனவும் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய பிறகே இதை தெரிவிப்பதாகவும் கூறினார். எனினும் இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். மேலும் மோடி விளக்கமளிக்க வேண்டு என கோரி மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக இதே பிரச்னை எழுப்பி மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக பதவி ஏற்ற முஃப்தி முகமது சயீத், தேர்தல் சுமூகமாக நடந்ததற்கு ஹூரியத் அமைப்பும், பாகிஸ்தானுமே காரணம் என கூறியிருந்தார்.

மூலக்கதை