ஜம்மு-காஷ்மீர் தேர்தல் தொடர்பாக முஃப்தி முகமது சர்ச்சை கருத்து: ராஜ்நாத் சிங் விளக்கம்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ஜம்முகாஷ்மீர் தேர்தல் தொடர்பாக முஃப்தி முகமது சர்ச்சை கருத்து: ராஜ்நாத் சிங் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் முதல்வராக முஃப்தி முகமது நேற்று பொறுப்பேற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய முஃப்தி முகமது, இங்கு தேர்தல் அமைதியாக நடக்க பாகிஸ்தான், ஹுரியத் அமைப்பு காரணம் என்றார். இதற்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமதுவின் கருத்து குறித்து இன்று மக்களவையில் காங்கிரஸ் கட்சி , கேள்வி எழுப்பியது. அப்போது விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடைபெற்றதற்கு, ராணுவம், தேர்தல் ஆணையம், ஜம்மு, காஷ்மீர் மக்களே காரணம் என்று கூறினார். மேலும் இது தொடர்பாக பிரதமரின் ஒப்புதலுக்கு பின் விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்காத காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மூலக்கதை