நடிகையுடன் நிச்சயதார்த்தம் ஹர்திக் பாண்டியாவுக்கு கோஹ்லி வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிகையுடன் நிச்சயதார்த்தம் ஹர்திக் பாண்டியாவுக்கு கோஹ்லி வாழ்த்து

மும்பை: நடிகையுடனான தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு, கேப்டன் விராட்  கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (26).

முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது ஓய்வில் உள்ளார். அடுத்து  நியூசிலாந்து செல்ல உள்ள இந்தியா ஏ அணியில் இடம் பிடித்துள்ளார்.

அதில் தனது உடல் தகுதியை பரிசோதித்த பின்னர், மீண்டும் முழு வீச்சில் இந்திய  அணிக்கு அவர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நேற்று தனது நிச்சயதார்த்த செய்தியை அவர் பதிவிட்டுள்ளார்.

செர்பியாவை சேர்ந்த நடிகை நடாசா  ஸ்டான்கோவிச்சுடன் தனக்கு திருமணமாக உள்ளது என்றும், அதற்கான எங்கேஜ்மென்ட் முடிந்துள்ளது என்பதை அறிவிக்கும் வகையிலும், அவருடன்  நெருக்கமாக உள்ள ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ‘எனக்கு நீ. உனக்கு நான்.

தேசத்துக்கே அது தெரியும் 01. 01. 2020 எங்கேஜ்டு’ என்ற தகவலை  பகிர்ந்துள்ளார். அவரது நிச்சயதார்த்த செய்தி ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

தற்போது மனைவி அனுஷ்காவுடன் நியூசிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, ஹர்திக்  பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு உடனடியாக ரியாக்ட் செய்துள்ளார்.

அவருக்கு வாழ்த்து தெரிவித்து விராட் கோஹ்லி தனது பதிவில், ‘வாழ்த்துக்கள்  ஹெச் (ஹர்திக்). உண்மையில் இது சந்தோஷமான செய்தி.

கடவுளின் அருளால் உங்களுக்கு இன்பமான தருணங்கள் காத்திருக்கின்றன’ என்று கூறியுள்ளார். விராட் கோஹ்லியை தொடர்ந்து முன்னணி கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

மூலக்கதை