காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை அதிகரிக்கும்…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை அதிகரிக்கும்…

காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை அதிகரிக்கும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவிகிதத்தில் இருந்து 49 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான அவசர சட்டம் டிசம்பர் மாதத்தில் பிறப்பிக்கப்பட்டது. எனினும், நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற, காப்பீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை