திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

கருப்பு பணத்தை மீட்கக் கோரி திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திரிணாமூல் காங்கிரஸின் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்பாட்டம் செய்தனர். கருப்பு பணத்தை மீட்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கையில் கூடைகளையும் ஏந்தியும் எம்பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசைக் கண்டித்தும் , கருப்பு பணத்தை மீட்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மூலக்கதை