சாமானிய மக்களும் வாங்கும் வகையில் குறைந்த விலையிலான வீடு…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
சாமானிய மக்களும் வாங்கும் வகையில் குறைந்த விலையிலான வீடு…

சாமானிய மக்களும் வாங்கும் வகையில் குறைந்த விலையிலான வீடு கட்டும் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஊக்கம் தரப்படவில்லை என அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கட்டுமான நிறுவனங்களின் சங்கமான கிரெடாயின் தலைவர் சேகர் ரெட்டி இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார். குறைந்த விலை வீடுகளுக்கு வட்டி மானியம் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் குறைந்த விலை வீட்டிற்காக கட்டுமான திட்டங்களை கட்டமைப்புத் துறை பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் தலைவரான நயன் ஷா கூறுகையில் 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை அரசு அறிவித்தாலும் அந்த இலக்கை எட்டுவதற்கு எந்த ஒரு செயல் திட்டமும் அறிவிக்கப்படவில்லை கூறியுள்ளார்

மூலக்கதை