இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் காய்ச்சலால் அவதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் காய்ச்சலால் அவதி

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் இன்று துவங்க உள்ள நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள், காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஆடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, இந்திய நேரப்படி இன்று பகல் 1. 30 மணிக்கு துவங்குகிறது.
 
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களாக கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் , தற்போது ஃபுளூ காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூவருமே நன்கு தேறி வருகின்றனர் என்று அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார். எனினும் நேற்று வரை அவர்கள் 3 பேரும் வலை பயிற்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இன்றைய போட்டிக்கான அணியை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

மற்றொரு வீரரான பென் ஸ்டோக்சின் தந்தை, மிகவும் கவலைக்கிடமான நிலையில் செஞ்சுரியனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தையை அருகில் இருந்து கவனித்து வந்த பென் ஸ்டோக்ஸ், நேற்று வலை பயிற்சியில் பங்கேற்றார்.

இதனால் அவர் இன்றைய போட்டிக்கான அணியில் இடம் பெறுவார் என்பது இங்கிலாந்துக்கு ஆறுதலான செய்தி.

.

மூலக்கதை