மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத்தை விடுவிக்கக் கோரி போராட்டம்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத்தை விடுவிக்கக் கோரி போராட்டம்

மாலத்தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முகமது நசீத் ஐ விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். NASHEEDஐ விடுவிக்க கோரி, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைநகர் மேலே இல் மாபெரும் போராட்டத்தை நடத்தியது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தற்போதைய அதிபர் அப்துல்லா யமீன் பதவி விலக வேண்டும் , அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின் போது எழுப்பப்பட்டன. இதனிடையே தலைநகரில் அமைதியை குலைக்க முயன்றதாக போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபரான முகமது நசீத், தீவிரவாத குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்திற்கு போலீசார் அவரை இழுத்து வந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியா , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இதற்கு கண்டனத்தை தெரிவித்தன.

மூலக்கதை