ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கொலை: ஐநா பொதுச் செயலாளர் கண்டனம்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கொலை: ஐநா பொதுச் செயலாளர் கண்டனம்

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான போரிஸ் நிம்ட்சோவ், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பான் கி மூன் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நிம்ட்சோவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை சுட்டு கொன்ற குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான போரிஸ் நிம்ட்சோவ், உக்ரைன் விவகாரத்தில் அதிபர் புதினின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது, கார் ஒன்றில் இருந்து அடையாளம் தெரியாத நபர் போரிஸ் நிம்ட்சோவை சுட்டுக்கொன்றார்.

மூலக்கதை