மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5 ரூபாய்…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5 ரூபாய்…

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து இவ்வகை சிலிண்டர்களின் விலை சென்னையில் 605 ரூபாய் 50 காசாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை விலை நிலவரத்தை ஒட்டி இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 7 மாதங்களில் தொடர்ச்சியாக 7 முறை குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விமானங்களுக்கான எரிபொருள் விலையும் 8.2 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு கிலோ லிட்டர் விலை 50 ஆயிரத்து 363 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து மற்ற எரிபொருள்களின் விலையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

மூலக்கதை