பிஃபா யு-17 மகளிர் கோப்பை: முதன்முறையாக குஜராத்தில் நடக்கிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிஃபா யு17 மகளிர் கோப்பை: முதன்முறையாக குஜராத்தில் நடக்கிறது

அகமதாபாத்: பிஃபா யு - 17 மகளிர் உலகக் கோப்பை - 2020 குஜராத் மாநிலம் அகமதாபாத் டிரான்ஸ்ஸ்டியா போட்டிக்கான தற்காலிக இடமாக  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, எல். ஓ. சி இயக்குனர் ரோமா கன்னா கூறுைகயில், “அகமதாபாத்திற்கு தற்காலிக அனுமதி  வழங்கப்பட்டுள்ளதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஃபிஃபா யு -17 மகளிர் உலகக் கோப்பை இந்தியா - 2020 நடப்பதால், குஜராத் அரசு தனது முழு  ஆதரவையும் உதவிகளையும் செய்துள்ளது. டிரான்ஸ் ஸ்டாடியா தற்போது நாட்டின் மிகச் சிறந்த வசதிகளில் ஒன்றான மைதானம்.   மேலும் இந்திய  கால்பந்து வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான இப்போட்டிக்கு ஆதரவளித்த அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களைத்  தெரிவிக்க விரும்புகிறோம்’’ என்றார்.குஜராத்தின் விளையாட்டு அமைச்சர் ஈஸ்வர்சிங் படேல் கூறுகையில், “நாட்டில் பெண்களுக்கான முதல் பிஃபா போட்டியை நடத்துவது குஜராத்துக்கு  கிடைத்த மிகப்பெரிய மரியாதை. போட்டியை வெற்றிகரமாக ஆக்குவதில் எங்களது அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்ற நாங்கள் முழுமையாக  கடமைப்பட்டுள்ளோம்.

இந்த போட்டி அடுத்த ஆண்டு நவ.

2 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று பிஃபா குழு அறிவித்துள்ளது’’ என்றார்.


.

மூலக்கதை