கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டா? மத்திய அமைச்சர் விளக்கம்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டா? மத்திய அமைச்சர் விளக்கம்

மத்திய பட்ஜெட் பெரு வணிக நிறுவனங்களுக்கு ஆதரவானது என்று கூறுவது முற்றிலும் தவறு என மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.

பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டது வருவாயை சமநிலைப்படுத்தும் ஒரு நடவடிக்கைதான் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். உண்மையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு 30 சதவிகித வரி விதிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு விலக்குகள் போக அவர்கள் தற்போது 23 சதவிகித வரியைத்தான் கட்டி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்நிலையை மாற்றுவதற்காக விலக்குகளை நீக்கிவிட்டு வரியை குறைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசு இந்த முடிவை எடுத்தது வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்காகத்தான் என்றும் அவர் விளக்கினார். இந்த பட்ஜெட்டால் அதிக ஆதாயம் அடைபவர்கள் நடுத்தர வர்க்க மக்கள்தான் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மூலக்கதை