நைஜீரிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர் மீட்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நைஜீரிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர் மீட்பு

அபுஜா: நைஜீரிய கடற்கரைக்கு அருகே ஹாங்காங் கொடியிடப்பட்ட கப்பலில் இருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள்  விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த 3ம் தேதி எம்டி நேவ் கான்ஸ்டாலேஷனில் இருந்து பணயக்கைதியாக 18 இந்தியர்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர். இந்நிலையில்,  நைஜீரிய கடற்கரைக்கு அருகே ஹாங்காங் கொடியிடப்பட்ட கப்பலில் இருந்து  கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள்  விடுவிக்கப்பட்டுள்ளதாக  நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.



இதுதொடர்பாக, கடல்சார் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும்  உலகளாவிய நிறுவனமான ஏஆர்எக்ஸ் வெளியிட்ட செய்தியில், ‘டிச. 3ம் தேதி கப்பல் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பேர் கப்பலில்  இருந்து மீட்கப்பட்டனர்.

அவர்களில் 18 பேர் இந்தியர்கள்.

இவர்களின் விடுதலை உறுதி செய்யப்பட்டதற்கு இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது’  என்று தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை