குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர் ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர் ஆர்ப்பாட்டம்

வாஷிங்டன்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் நடப்பது போன்று, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக போராட்டம்  நடந்தது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையின் முன்பாக ஏராளமான இந்திய -  அமெரிக்கர்கள் திரண்டு, திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.

இதுகுறித்து, வாஷிங்டனை தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பு மையமான பன்மைத்துவத்தைச் சேர்ந்த இந்திய-அமெரிக்கன் மைக்  கவுஸ் கூறுகையில், “நாங்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த ஒரேஒரு காரணம்தான். மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரம்தவிர வேறொன்றுமில்லை”  என்றார்.



இதேபோன்று, அமெரிக்க - இந்திய முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரேட்டர் வாஷிங்டன் பகுதியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆதரவாக கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.

குடியுரிமை சட்டம் மற்றும்  என்ஆர்சிக்கு எதிராக சுவரொட்டிகளையும் பதாகைகளையும் காண்பித்து போராடினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் விரும்புவது இந்திய  அரசால் சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

இதனால் நாம் அனைவரும் ஒரே இந்தியா ஒரே மக்களாக இருக்க முடியும்’  என்றனர்.

இதுகுறித்து அமெரிக்க-இந்திய முஸ்லிம்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கலீம் கவாஜா கூறுகையில், “இந்தியாவின் பொருளாதாரம் மிகவும்  வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், வேலையின்மை அதிகரித்து வருகிறது.

சட்டவிரோதம் பரவலாக உள்ளது. ஊழல் அதிகரித்து வருகிறது.

இந்த  தீவிரமான பிரச்னைகளை தீர்க்க பாஜக அரசு செயல்படுவதற்கு பதிலாக, இந்தியர்களை குடிமக்களாக நிரூபிக்க கட்டாயப்படுத்தும் விசித்திரமான  கொள்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் இந்திய குடிமக்களாகதான் இருக்கிறார்கள்” என்றார்.

இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைெபறும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டம் நடப்பது  குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை