ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார  மாநாடு, வரும் 28ல் தொடங்குகிறது.  இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் கூறியதாவது: 

உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, 2009ல் துவங்கி, பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.  இதுவரை ஐந்து மாநாடுகள் அந்தந்த நகரத்துடன் இணைந்து உச்சி மாநாடாகவும் நடத்தப்பட்டது.  ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் டிசம்பர் 28 முதல் 30 தேதிவரை மூன்றுநாட்கள்  சென்னை, லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் நடக்கவிருக்கிறது. 

இந்த மாநாட்டில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர  சிங் ஷெகாவத், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உட்பட பலர் இந்தியாவிலிருந்தும் , உலக நாடுகளிலிருந்தும் பங்கேற்கிறார்கள்.  இம்மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் , அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், வணிகர்கள், பங்கேற்கின்றனர். 

மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று விருதுகள் வாழ்குகிறார்கள். இம்மாநாடு வணிகம் பெருகவும், முதலீடுகளை ஈர்க்கவும் நடைபெறுவதாக குறிப்பிட்டார். 

மேலும் விவரங்களுக்கு: https://www.economicconference.in/

மூலக்கதை